அடிமை வர்த்தகம் மற்றும் அதன் ஒழித்தலை நினைவு கூறுவதற்கான அனுசரிப்பு தினம் – ஆகஸ்ட் 23
August 26 , 2020 1817 days 582 0
இது விடுதலைக்காக போராடியவர்களையும், அவர்களின் பெயரில் அவர்களின் கதை மற்றும் விழுமியங்கள் ஆகியன தொடர்ந்து கற்பிக்கப் பட்டு, அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது அட்லாண்டிக் பெருங்கடல் அடிமை வர்த்தகத்தை நினைவு கூறுவதற்காக யுனெஸ்கோவினால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
1791 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், சாண்ட்டோ டோமிங்கோவில் (தற்பொழுது ஹய்தி மற்றும் டொமினிக் குடியரசு) ஒரு புரட்சியானது தொடங்கியது. இது அட்லாண்டிக் பெருங்கடல் அடிமை வர்த்தகத்தை ஒழிப்பதில் ஒரு முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இது அடிமை வர்த்தகம் மற்றும் காலனியவாதம் என்ற அடிமை முறையின் ஒழித்தலின் தொடக்கத்தைக் குறிக்கின்றது.