அடுத்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி - சரத் அரவிந்த் போப்டே
October 21 , 2019 2116 days 740 0
வயது மூப்பின் அடிப்படையில் தனக்கு அடுத்துப் பதவிக்கு வருபவரை நியமிக்க, இந்தியத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் நீதிபதி சரத் அரவிந்த் போப்டேவின் பெயரைப் பரிந்துரைத்துள்ளார்.
இந்தியத் தலைமை நீதிபதி கோகாய்க்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக நீதிபதி போப்டே உள்ளார்.
வழக்கமாக பதவியிலிருந்து விடைபெறும் தலைமை நீதிபதி தனக்கு அடுத்துப் பதவிக்கு வருபவர் பற்றிய பரிந்துரையை 30 நாட்களுக்கு முன்னர் அனுப்பி, அடுத்த இந்தியத் தலைமை நீதிபதியை நியமிக்கும் பணியைத் தொடங்குகிறார்.
போப்டே முன்னாள் இந்திய தலைமை நீதிபதி முகமது ஹிதயத்துல்லாவுக்குப் பிறகு மகாராஷ்டிராவின் நாக்பூர் பிராந்தியத்தைச் சேர்ந்த இரண்டாவது நீதிபதியாகவும், இந்தியாவின் 47வது தலைமை நீதிபதியாகவும் இருப்பார்.