அடுத்த 3 ஆண்டுகளில் 75 புதிய மருத்துவக் கல்லூரிகள்
August 29 , 2019 2174 days 546 0
2021-22 ஆம் ஆண்டிற்குள் 75 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நடவடிக்கையானது நாட்டில் மேலும் 15,700 எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்க இருக்கின்றது.
குறைந்த பட்சம் 200 படுக்கைகளைக் கொண்ட மாவட்ட மருத்துவமனைகளுடன் இது போன்ற கல்லூரிகள் இல்லாத குறைந்த சேவைப் பகுதிகளில் இந்த மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படும்.
300 படுக்கைகளைக் கொண்ட மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் இலட்சிய மாவட்டங்கள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்படும்.