சிலி நாட்டில் உள்ள அட்டகாமா என்ற பிராந்தியத்தில் உள்ள ஃபிலோ டெல் சோல் திட்டத்திற்கான புதிய வள மதிப்பீடு ஆனது, உலகின் மிகப்பெரிய தாமிரம், தங்கம் மற்றும் வெள்ளி வளங்களில் ஒன்றை உறுதிப்படுத்தியுள்ளது.
இது கடந்த 30 ஆண்டுகளில் மிகப்பெரிய பசுந்தட (இதுவரைப் பயன்படுத்தப்படாத) தாமிர இருப்பின் கண்டுபிடிப்பு ஆகும்.
இங்கு குறைந்தது 13 மில்லியன் டன் தாமிரம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இங்கு 32 மில்லியன் அவுன்ஸ் தங்கமும் 659 மில்லியன் அவுன்ஸ் வெள்ளியும் இருக்கக் கூடும்.