அட்லாண்டிக் கடல் பகுதியின் அடிமைகள் வர்த்தகம் மற்றும் அடிமைத் தனத்தினால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூர்வதற்கான சர்வதேச தினம் – 25 மார்ச்
March 25 , 2019 2340 days 590 0
அட்லாண்டிக் கடல் பகுதியின் அடிமைகள் வர்த்தகம் மற்றும் அடிமைத் தனத்தினால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூறுவதற்கான சர்வதேச தினமானது ஐ.நா.வால் 2007ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 25 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகின்றது.
இந்த தினமானது அட்லாண்டிக் கடல் பகுதியில் அடிமைகள் முறையால் பாதிக்கப்பட்ட மற்றும் இறந்தவர்களைப் பெருமைப்படுத்துவதற்காகவும் நினைவு கூறுவதற்காகவும் கடைபிடிக்கப்படுகின்றது.
இந்த தினமானது முதன்முதலில் 2008 ஆம் ஆண்டு “அமைதியை முறித்து, நாம் மறந்து விடுவோம்” எனும் கருத்துருவுடன் அனுசரிக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டின் கருத்துருவானது, “அடிமைத்தனத்தை நினைவு கூர்வோம், அது நீதிக்கான கலையின் சக்தி” என்பதாகும்.