TNPSC Thervupettagam

அணுகல் சமத்துவக் குறியீடு 2026

November 18 , 2026 2 days 73 0
  • ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் புதிய பொருளாதார ஆய்வுகளுக்கான மையத்தால் (CNES) 2026 ஆம் ஆண்டு அணுகல் சமத்துவக் குறியீடு (AEI) வெளியிடப்பட்டுள்ளது.
  • இக்குறியீட்டில் 0.68 புள்ளிகளுடன் கோவா முதலிடத்தைப் பிடித்துள்ளது; அதனைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேசம் (0.66), சிக்கிம் (0.63), கேரளா (0.60), மற்றும் தமிழ்நாடு மற்றும் தெலங்கானா (தலா 0.57) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
  • தனிநபர் வருமானத்தில் 13-வது இடத்தில் இருந்த ஆந்திரப் பிரதேசம் இக்குறியீட்டில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • அடிப்படை உள்கட்டமைப்பு, சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, சமூக-பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் நீதிக்கான அணுகல் ஆகிய ஐந்து துறைகளை இக்குறியீடு மதிப்பீடு செய்துள்ளது.
  • ஐந்து துறைகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, 23 பிரிவுகளில் 60 குறிகாட்டிகளை இது பயன்படுத்தியுள்ளது.
  • சமூக-பொருளாதாரப் பாதுகாப்பில் 0.69 புள்ளிகளுடன் ஆந்திரப் பிரதேசம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்