அணுசக்தி சார் நிறுவல்களின் பரிமாற்றப் பட்டியல் 2025
January 3 , 2025 253 days 263 0
முப்பது ஆண்டு கால நடைமுறையின் ஒரு தொடர்ச்சியாக, ஜனவரி 01 ஆம் தேதியன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தங்களது அணுமின் நிலையங்களின் பட்டியலைப் பரிமாறிக் கொண்டுள்ளன.
இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று தங்களது அணுமின் நிலையங்களைத் தாக்குவதைத் தடுக்கின்ற இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் ஆனது, 1988 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியன்று கையெழுத்திடப் பட்டு, 1991 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதியன்று நடைமுறைக்கு வந்தது.
ஒவ்வொரு நடப்பு ஆண்டிலும் ஜனவரி 01 ஆம் தேதியன்று இந்த ஒப்பந்தத்தின் கீழ் குறிப்பிடக் கூடிய அணுசக்தி நிறுவல்கள் மற்றும் மையங்கள் குறித்து இரு நாடுகளும் அதன் பரஸ்பர தகவல்களைத் தெரிவிக்க வேண்டும் என்று இந்த ஒப்பந்தம் என்பது வலியுறுத்துகிறது.
இரு நாடுகளுக்கிடையிலான இத்தகையப் பட்டியல்களின் ஒரு தொடர்ச்சியான 34வது பரிமாற்றம் இதுவாகும்.