அணுசக்தி தாக்குதல் எதிர்ப்புத் திறன் கொண்ட மிதக்கும் செயற்கை தீவு
November 26 , 2025 15 hrs 0 min 43 0
சீனா ஆழ்கடல் ஆராய்ச்சிக்காக 2028 ஆம் ஆண்டிற்குள் தயாராக இருக்கத் திட்டமிடப் பட்டுள்ள ஓர் இடம் பெயருகின்ற மிதக்கும் செயற்கை தீவை உருவாக்கத் தொடங்கி உள்ளது.
இந்தத் தளத்திற்கு ஆழ்கடல் அனைத்து-வானிலை குடியிருப்பு அம்சம் கொண்ட மிதக்கும் ஆராய்ச்சி மையம் என்று பெயரிடப்பட்டுள்ளது என்பதோடு மேலும் இது சுமார் 78,000 டன் எடை கொண்டது.
இந்தத் தீவு, மிகவும் வலுவான அதிர்ச்சிகளை உள்வாங்கக் கூடிய, அணு குண்டு வெடிப்புகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட லேட்டிஸ் என்ற ஒரு சிறப்பு உலோகப் பொருளைப் பயன்படுத்தி கட்டமைக்கப்படுகிறது.
இந்தத் தீவு சீனாவின் 14வது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதோடுஇது வெப்ப மண்டலப் புயல்கள் உட்பட மிகவும் கடுமையான கடல் சார் சூழல்களிலும் செயல்படக் கூடியது.