அணு ஆயுதங்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - செப்டம்பர் 26
September 29 , 2019 2142 days 600 0
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 26 அன்று அணு ஆயுதங்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கான சர்வதேச தினம் (International Day for the Total Elimination of Nuclear Weapons - INTEN) அனுசரிக்கப் படுகின்றது.
2013 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட ஐ.நா பொதுச் சபைத் தீர்மானமானது செப்டம்பர் 26 ஆம் தேதியை INTEN தினமாக அறிவித்தது.
இது அணு ஆயுதங்களால் மனித குலத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல் மற்றும் அவை முற்றிலுமாக அகற்றப்படுவதன் அவசியம் குறித்துப் பொதுமக்களிடையே விழிப்புணர்வையும் அது குறித்த அறிவையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.