ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) வருடாந்திர முக்கியத் தகவல் புத்தகம் ஆனது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
உலகளவில் சுமார் 12,241 அணு ஆயுதங்களும், இராணுவ இருப்புக்களில் ~9,614 அணு ஆயுதங்களும் உள்ளன.
உலகளாவியப் போர் ஆயுதங்களில் சுமார் 90 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை ரஷ்யா (5,459) மற்றும் அமெரிக்கா (5,177) ஆகிய நாடுகள் கொண்டுள்ளன.
2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாத நிலவரப்படி, இந்தியாவில் 180 அணு ஆயுதங்கள் சேமிக்கப் பட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாத நிலவரப்படி, பாகிஸ்தானின் அணு ஆயுத கையிருப்பு 170 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவில் 600 அணு ஆயுதங்கள் உள்ளன என்பதோடு இது 2023 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டிற்கு ~100 என்ற அளவில் அதிகரித்து வருகிறது.
உலகில் அணு ஆயுதம் கொண்ட ஒன்பது நாடுகள் - அமெரிக்கா, ரஷ்யா, ஐக்கியப் பேரரசு, பிரான்சு, சீனா, இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஆகும்.