அணு கனிமச் சுரங்கத்தைப் பொது ஆலோசனையிலிருந்து விலக்கு அளிக்கும் மத்திய அரசின் அறிவிப்பை தமிழ்நாடு அரசு எதிர்த்தது.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தினால் வெளியிடப் பட்ட அலுவலகக் குறிப்பாணையை திரும்பப் பெறுமாறு தமிழ்நாடு அரசு மத்திய அரசினை வலியுறுத்தியது.
2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 08 ஆம் தேதியிட்ட குறிப்பாணை, அணு, முக்கியமான மற்றும் மூலோபாய கனிமங்கள் தொடர்பான திட்டங்களைப் பொது ஆலோசனையில் இருந்து விலக்குகிறது.
நிர்வாக உத்தரவுகள் மூலம் சட்டத்தைத் திருத்துவதற்கு எதிராக அலெம்பிக் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் மற்றும் ரோஹித் பிரஜாபதி இடையிலான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 2020 ஆம் ஆண்டு தீர்ப்பு உள்ளிட்ட கடந்த கால சட்ட முன்னுதாரணங்களை தமிழ்நாடு அரசு மேற்கோள் காட்டியது.