அணு மின் நிலையங்களின் செயல்பாட்டினை பாதிக்கும் ஜெல்லிமீன்கள்
August 20 , 2025 17 hrs 0 min 16 0
ஜெல்லிமீன்களின் கூட்டங்கள் குளிரூட்டலுக்கான நீர் விநியோகக் குழாய்களை அடைத்துள்ளதால் பிரான்சின் முக்கிய அணு மின் நிலையங்களில் ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இந்த உலைகள் ஆனது, அவற்றின் உலைகளையும், விசையாழிகளையும் குளிர்விக்க கடல் நீரின் தொடர்ச்சியான ஓட்டத்தைச் சார்ந்துள்ளன.
ஜெல்லிமீன்களின் கூட்டம் அதிக எண்ணிக்கையில் கொத்தாகக் குவிவதால் இந்தக் குழாய்களில் நீர் ஓட்டங்கள் விரைவாக தடைபடுகின்றன.
இறந்த ஜெல்லிமீன்கள் பல உறைகள் வழியாகச் சென்று உள் அமைப்புகளை சேதப்படுத்தும் கூழ்மம்/ஜெல் போன்ற பொருளாக மாறும்.
நீர் வழங்கீட்டுக் குழாய்களில் இருந்து ஜெல்லிமீன்களை நீக்குவது இரண்டு நாட்கள் வரை எடுக்கக்கூடிய ஒரு கடினமான மற்றும் ஆபத்தான செயல்முறையாகும்.
1990 ஆம் ஆண்டுகளில் இருந்து, ஜெல்லிமீன்கள் உலகளவில் உள்ள அணுமின் நிலையங்களின் செயல்பாட்டினைப் பாதித்துள்ளன.
பருவநிலை மாற்றம் கடல் நீரை வெப்பமாக்கி, ஜெல்லிமீன்களின் இனப் பெருக்கத்தினைத் துரிதப்படுத்தியதோடு, அவற்றின் உணவு விநியோகத்தையும் அதிகரித்துள்ளது.
அதிகப்படியான மீன்பிடித்தல் மற்றும் நெகிழி மாசுபாடு அதன் உயர் மட்ட வேட்டையாடும் இனங்களை அகற்றி, கடற்கரைகளுக்கு அருகில் அவற்றிக்கான இனப்பெருக்க இடங்களை வழங்குவதன் மூலம் ஜெல்லிமீன்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்துள்ளது, இது ஆலைகளின் மின் விநியோக நிறுத்தம் மற்றும் மின் தடைகளின் அபாயத்தை அதிகரித்துள்ளது.