அண்டார்டிகா கோடைகாலக் கடல் பனியானது தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளாக குறைந்து புதிய அளவினைப் பதிவு செய்துள்ளது.
2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், டென்மன் பனிப்பாறை அருகே கடல் பனியில் 70% குறைந்துள்ளது பதிவாகியுள்ளது.
2022 ஆம் ஆண்டு மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் அண்டார்டிகாவின் கடற்கரையில் 50%க்கும் அதிகமான பகுதிகள் வெளிப்பட்டன என்பதோடு இது அப்பனிப்பாறைகள் உருவாவதை இரட்டிப்பாக்கியது.
எம்பேரர் பெங்குவின் அனைத்து இனக் குழுக்களும் இனப்பெருக்க வீழ்ச்சிகளை எதிர் கொண்டன என்பதோடு மேலும் நிலையான பனித் தளங்களைக் கண்டுபிடிக்க கடல் நாய்கள் / சீல்கள் போராடின.
சுருங்கி வரும் கடல் பனி அளவானது அண்டார்டிகா தளங்களுக்களின் மீளுருவாக்கப் பணிகளை சீர்குலைக்கிறது.