அண்டார்டிக்கா மற்றும் தெற்கு அரைக்கோளத்தில் உள்ள பறவைகளின் வட்டார இயல்பு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது என்பதோடு இது அவற்றின் தனித்துவமானப் பல்லுயிர்த் தன்மையினை எடுத்துக்காட்டுகிறது.
வட்டார இயல்பு என்பது குறிப்பிட்ட புவியியல் பகுதிகளில் மட்டுமே அந்த இனங்கள் காணப்படும் இயல்பு ஆகும்.
கருப்பு நிறக் கண்கள் மற்றும் கருப்பு நிற அலகைக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க வெண்ணிறக் கடற்பறவையானது, தென் துருவத்தில் இதுவரை தென்பட்ட மூன்று பறவை இனங்களில் ஒன்றாகும்.
உண்மையில், பூமியில் இந்தப் பறவை வாழும் ஒரே இடம் அண்டார்டிக்கா மட்டுமே ஆகும்.
உலகளாவிய இனங்களின் வட்டார இயல்பின் பரவல்கள் மிகச் சரியாக வரையறுக்கப் படாததற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.
மிக முதலாவதாக, வட்டார இயல்பினைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும் மிகவும் ஒரு பொதுவான முறையானது, ஒட்டு மொத்தமாக அதிக இனங்கள் உள்ள இடங்களுக்கு மிக அதிக மதிப்புகளைக் கொடுக்க முனைகிறது என்ற நிலையில் இது இனங்களின் செழுமை என்று அழைக்கப்படுகிறது.
கூடுதலாக, பன்முகத் தன்மை பற்றிய உலகளாவியப் பெரும் ஆய்வுகள் பெரும்பாலும் ஒப்பீட்டளவில் இனங்கள் குறைவாக உள்ள பகுதிகளை விலக்குகின்றன.
ஒரு சில இனங்களை மட்டுமே கொண்ட தளங்கள் விடுபட்டால், இது மற்ற அனைத்து தளங்களுக்கான வட்டார இயல்பின் மதிப்பீடுகளை பாதிக்கிறது.
தெற்கு அரைக்கோளத்தில் வடக்கு அரைக் கோளத்தை விட குறைவான நிலப்பரப்பும் அதிக கடல் பரப்பும் உள்ளன.
பரந்த பெருங்கடல்களால் உருவான இந்த பிரிவு உயிரினங்களின் எல்லைகள் மற்றும் பரவலைக் கட்டுப்படுத்துகிறது.
இதன் விளைவாக, இந்தத் தனிமைப்படுத்தப் பட்ட நிலப்பரப்புகளில் உள்ள பறவைக் குழுக்களில் குறைவான இனங்களே காணப்படுகின்றன இதனால் வட்டார இயல்புத் தன்மை அதிகரிக்கிறது.
இதற்கு நேர்மாறாக, வடக்கு அரைக்கோள இனங்கள் பரந்தப் பரவலை அனுமதிக்கும் பெரிய, இணைக்கப்பட்ட நிலப்பரப்புகளைக் கொண்டுள்ளன.
வடக்கு அரைக்கோள இனங்கள் தங்கள் எல்லைகளைத் தொடர்ச்சியான நிலத்தில் இருந்து குளிரான பகுதிகளுக்கு மாற்றலாம்.
தெற்கு அரைக்கோள இனங்கள் பெருங்கடல்கள் மற்றும் அண்டார்டிக்கா போன்ற பொருத்தமற்ற வாழ்விடங்களால் தடுக்கப்படுகின்றன.
பன்முகத் தன்மையின் அனைத்து அம்சங்களிலும் வடக்கு அரைக்கோள இனங்களை விட தெற்கு அரைக்கோள இனங்கள் அதிக வட்டார இயல்பு தன்மை விகிதங்களைக் கொண்டுள்ளன என்று கண்டறியப்பட்டது.
அண்டார்டிக்காவின் துணைத் தீவுகள் மற்றும் உயர் ஆண்டஸ் பகுதிகள், அத்துடன் ஆஸ்திரேலியா, அயோடெரோவா நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவில் உள்ள பல பகுதிகள், வட்டார இயல்புத் தன்மை வாய்ந்த உலகளாவிய இடங்களாக தனித்து நிற்கின்றன.