2025 ஆம் ஆண்டில் அண்டார்டிக் ஓசோன் துளையானது, 1992 ஆம் ஆண்டு முதல் 5வது மிகவும் சிறிய துளையாக இருந்தது என்று நாசா மற்றும் தேசியப் பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) தெரிவித்துள்ளது.
செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் அதன் மிகப்பெரிய அளவு 8.83 மில்லியன் சதுர மைல்கள் ஆகும் என்ற நிலையில்இது 2006 ஆம் ஆண்டில் பதிவான அளவை விட 30% சிறியது ஆகும்.
ஓசோன் துளை என்பது ஓசோன் அளவு 220 டாப்சன் அலகுகளுக்குக் கீழே குறைகின்ற படை அடுக்கு மண்டலத்தில் உள்ள ஒரு பகுதியாகும்.
மாண்ட்ரியல் நெறிமுறை (1992) ஆனது CFC (குளோரோஃப்ளூரோகார்பன்கள்) போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களைக் குறைத்து, ஓசோன் அடுக்கை மீளச் செய்ய உதவுகிறது.
வெப்பநிலை மற்றும் காற்று சுழற்சி போன்ற வானிலைக் காரணிகளும் 2025 ஆம் ஆண்டில் ஓசோன் துளையை குறைக்க உதவியது.