TNPSC Thervupettagam

அண்ட்ரோமெடா விண்மீன் திரளில் குறைந்து வரும் நட்சத்திர உருவாக்கம்

July 31 , 2026 13 hrs 0 min 32 0
  • நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியின் தரவுகளைப் பயன்படுத்திய ஒரு புதிய ஆய்வின்படி, அண்ட்ரோமெடா விண்மீன் திரளில் கடந்த 500 மில்லியன் ஆண்டுகளாக நட்சத்திர உருவாக்கம் குறைந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.
  • அண்ட்ரோமெடா விண்மீன் திரள் (M31) என்பது பூமியில் இருந்து சுமார் 2.5 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு பெரிய சுருள் விண்மீன் திரளாகும்.
  • இது பால்வீதி விண்மீன் திரளுக்கு மிக அருகில் உள்ள ஒரு பெரிய விண்மீன் திரளான இதனை சாதகமான சூழ்நிலைகளில் வெறும் கண்ணால் காண முடியும்.
  • இது அண்ட்ரோமெடா விண்மீன் தொகுப்பில் அமைந்துள்ளது மற்றும் பால்வீதிக்கு இணையான அளவைக் கொண்டுள்ளது.
  • இது ஒரு கோடிட்ட சுருள் விண்மீன் திரளாகும்; இதன் மையப்பகுதியில் நட்சத்திரங்களாலான ஒரு பட்டை போன்ற அமைப்பு காணப்படுகிறது.
  • இந்த விண்மீன் திரள் வினாடிக்கு 110 கி.மீ வேகத்தில் பால்வீதியை நோக்கி நகர்கிறது மற்றும் தொலைதூர எதிர்காலத்தில் அதனுடன் ஒன்றிணையக் கூடும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்