ஜார்க்கண்டில் உள்ள அதன் 1,600 மெகாவாட் திறன் கொண்ட கோடா அதி மிகை மாறு நிலை வெப்பநிலை மற்றும் அழுத்த அனல் மின் உற்பத்தி நிலையத்தை இந்திய மின் கட்டமைப்போடு இணைக்கும் அதானி பவர் லிமிடெட் நிறுவனத்தின் முன்மொழிவை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம் ஆக அறிவிக்கப்பட்ட இந்த ஆலை, நீண்ட கால ஒப்பந்தத்தின் கீழ் வங்காளதேசத்திற்குப் பிரத்தியேகமாக மின்சாரம் வழங்கி வந்தது.
கோடா மாவட்டத்தில் உள்ள 56 கிராமங்கள் வழியாகச் செல்லும் கஹல்கான் A–மைத்தான் B பாதை வழியாக இந்திய மின் கட்டமைப்புடன் இந்த நிலையத்தினை இணைக்க இந்த ஒப்புதல் அனுமதிக்கிறது.
மின்சார அமைச்சகமானது, 2003 ஆம் ஆண்டு மின்சாரச் சட்டத்தின் 164வது பிரிவின் கீழ், அதானி மின்னாற்றல் நிறுவனத்திற்கு தந்தி அதிகாரங்களைப் போன்றே, மின் பகிர்மான கம்பிகளின் நிறுவலுக்கான அதிகாரத்தை வழங்கியது.