அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கை
January 31 , 2023 925 days 546 0
அமெரிக்க நாட்டின் முதலீட்டு ஆலோசனை வழங்கீட்டு நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட ஒரு அறிக்கைக்குப் பிறகு, அதானி குழுமப் பங்குகள் பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளன.
அதானி குழுமம் மோசடி மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அதானி 11வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் பல பெரிய நிறுவனங்களில் நடந்த ஊழல்களை வெளிக் கொண்டு வருகிறது.
தற்போது இந்த மோசடிகளின் அறிக்கையை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இது சமபங்கு, கடன் மற்றும் பங்குகள் ஆகியவற்றினைப் பகுப்பாய்வு செய்யும் ஒரு தடயவியல் நிதி ஆராய்ச்சி நிறுவனம் ஆகும்.