உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் உலக வானிலை அமைப்பு (WMO) ஆகியவை Climate Change and Workplace Heat Stress (பருவநிலை மாற்றம் மற்றும் பணியிட வெப்ப அழுத்தம்) என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டன.
20 டிகிரி செல்சியஸுக்கு மேல் உள்ள ஒவ்வொரு டிகிரி வெப்பநிலைக்கும் வேலை உற்பத்தித் திறன் 2 முதல் 3 சதவீதம் வரை குறைகிறது என்று அறிக்கை கூறுகிறது.
உலக மக்கள்தொகையில் குறிப்பாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஏறத்தாழ பாதி பேர் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தியாவில் அதிகாலை வெப்பநிலை உயர்வு ஆனது உட்புற மற்றும் வெளிப்புற வேலைகளில் வேலைத் திறனை கணிசமாகக் குறைக்கிறது.
வெப்ப அழுத்தம் ஆனது நீரிழப்பு, அதிக வெப்பத்தினால் ஏற்படும் பக்கவாதம், சிறுநீரகச் செயலிழப்பு மற்றும் நரம்பியல் கோளாறுகள் போன்ற பல்வேறு சுகாதார அபாயங்களை அதிகரிக்கிறது.
ஈரக்குமிழ் வெப்பநிலையில் (WBGT) பதிவாகும் ஒவ்வொரு மணி நேர அதிகரிப்பானது வெப்பம் அதிகம் வெளிப்படும் சூழலிலான தொழில்களில் அதிக உற்பத்தித்திறன் இழப்பை ஏற்படுத்துகிறது.
தினசரி வானிலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் பருவகால மாற்றங்கள் தொழிலாளர்களுக்கு குறைந்த வருமானம் மற்றும் அதிக சுகாதாரச் செலவுகள் போன்ற இரட்டைச் சுமையை உருவாக்குகின்றன.