அதிக உப்பு மற்றும் சர்க்கரையைக் கொண்ட பொருட்கள் மீது குறியிடுதலுக்கான விதிமுறைகள்
July 1 , 2019 2204 days 712 0
உணவுப் பொருட்களானது கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவற்றை அதிக அளவில் கொண்டுள்ளதைக் காட்டும் வகையில் அவற்றின் அடையாளக் குறியீட்டுச் சீட்டில் சிவப்பு நிறக் குறியீடுகளை கட்டாயமாக்க இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (Food Safety and Standards Authority of India - FSSAI) முடிவு செய்துள்ளது.
பல்வேறு வகையான உணவுப் பொருட்களுக்கான சோடியம் மற்றும் கொழுப்புப் பொருட்களின் உள்ளடக்கத்திற்கான எல்லையளவை FSSAI வரையறுத்துள்ளது.
சர்க்கரையளவைப் பொறுத்தவரை, 100கி/100மிலி பொருளில் வழங்கப்படும் மொத்த ஆற்றலில் (கிலோ கலோரி) 10 சதவீதத்திற்கும் அதிகமாக சர்க்கரை உள்ளடக்க மதிப்பை சேர்க்கும் உணவுப் பொருட்களில் சிவப்பு நிறக் குறியீடு இடுதலை இந்த வரைவு விதிமுறைகளானது முன்மொழிகின்றது.