அதிக எண்ணிக்கையிலான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் – தேசியத் தலைநகர்ப் பகுதியான தில்லி
September 12 , 2019 2169 days 623 0
பெங்களூரைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனமான ஜின்னோவ் மற்றும் டை தில்லி ஆகியவை "டர்போசார்ஜிங் டெல்லி - தேசியத் தலைநகர்ப் பகுதியில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் (புதிய தொழில் தொடங்குதல்) சூழல் அமைப்பு" என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளன.
பெங்களூரு மற்றும் மும்பையை விட தேசியத் தலைநகர்ப் பகுதியான தில்லியானது அதிகமான ஸ்டார்ட் அப் மற்றும் யூனிகார்ன் நிறுவனங்களைக் கொண்டுள்ளது என்று அந்த அறிக்கை கூறுகின்றது.
யூனிகார்ன் என்பது குறைந்தபட்சம் 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனங்கள் ஆகும்.
பொருத்தமான அரசு மற்றும் தனியார் துறை இடையீடுகளுடன் தேசியத் தலைநகர்ப் பகுதியான தில்லியானது 2025 ஆம் ஆண்டில் முதல் 5 உலகளாவிய ஸ்டார்ட் அப் மையங்களில் ஒன்றாக உருவெடுக்கும்.