TNPSC Thervupettagam

அதிக கடன் - மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் கொண்ட 10 நாடுகள் 2025

May 5 , 2025 61 days 147 0
  • சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சமீபத்திய கணிப்புகள் ஆனது, உலகளாவிய அரசுகளின் கடன் ஆனது, 2020 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 98.9 சதவீதத்தினை எட்டிய COVID-19 பெருந்தொற்றுக் காலத்தின் அளவை விட அதிகமாக இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.
  • உலகளாவிய அரசுகளின் கடன் ஆனது 2027 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 117 சதவீதத்தினை விட அதிகமாக இருக்கலாம்.
  • உலகளாவியப் பொதுக் கடன் இந்தப் பத்தாண்டின் (2030) இறுதிக்குள் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 100% (99.6%) பங்கினை எட்டக் கூடும்.
  • சூடான் 252% என்ற உலகிலேயே அதிகக் கடன் மற்றும் GDP விகிதத்துடன் ஜப்பானை முந்தியது.
  • வளர்ச்சியடைந்த மற்றும் முன்னேற்றமடைந்த பொருளாதாரங்களில், ஜப்பான் 234.9% பங்குடன் மிக அதிக கடன் மற்றும் GDP விகிதத்தைக் கொண்டுள்ளது.
  • உலகின் மிகப்பெரிய பொருளாதாரமான அமெரிக்கா, 2025 ஆம் ஆண்டில் 123% என்ற அதிக கடன் மற்றும் GDP விகிதத்துடன் உலகளவில் எட்டாவது இடத்தில் உள்ளது.
  • பிரான்சு நாடானது, 116.3% என்ற பொதுக் கடன் விகிதத்துடன் 9வது இடத்தில் உள்ளது என்ற நிலையில் கனடா முதல் பத்து இடங்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது.
  • சீனா, 96% பொதுக் கடன் விகிதத்துடன் 21வது இடத்தில் உள்ளது.
  • இந்தியா 80% என்ற கடன் மற்றும் GDP விகிதத்துடன் உலகளவில் இதில் 31வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்