அதிக கடன் - மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் கொண்ட 10 நாடுகள் 2025
May 5 , 2025 61 days 148 0
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சமீபத்திய கணிப்புகள் ஆனது, உலகளாவிய அரசுகளின் கடன் ஆனது, 2020 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 98.9 சதவீதத்தினை எட்டிய COVID-19 பெருந்தொற்றுக் காலத்தின் அளவை விட அதிகமாக இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.
உலகளாவிய அரசுகளின் கடன் ஆனது 2027 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 117 சதவீதத்தினை விட அதிகமாக இருக்கலாம்.
உலகளாவியப் பொதுக் கடன் இந்தப் பத்தாண்டின் (2030) இறுதிக்குள் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 100% (99.6%) பங்கினை எட்டக் கூடும்.
சூடான் 252% என்ற உலகிலேயே அதிகக் கடன் மற்றும் GDP விகிதத்துடன் ஜப்பானை முந்தியது.
வளர்ச்சியடைந்த மற்றும் முன்னேற்றமடைந்த பொருளாதாரங்களில், ஜப்பான் 234.9% பங்குடன் மிக அதிக கடன் மற்றும் GDP விகிதத்தைக் கொண்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய பொருளாதாரமான அமெரிக்கா, 2025 ஆம் ஆண்டில் 123% என்ற அதிக கடன் மற்றும் GDP விகிதத்துடன் உலகளவில் எட்டாவது இடத்தில் உள்ளது.
பிரான்சு நாடானது, 116.3% என்ற பொதுக் கடன் விகிதத்துடன் 9வது இடத்தில் உள்ளது என்ற நிலையில் கனடா முதல் பத்து இடங்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது.
சீனா, 96% பொதுக் கடன் விகிதத்துடன் 21வது இடத்தில் உள்ளது.
இந்தியா 80% என்ற கடன் மற்றும் GDP விகிதத்துடன் உலகளவில் இதில் 31வது இடத்தில் உள்ளது.