அதிக சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் வசூல் - ஏப்ரல் 2024
May 5 , 2024 434 days 466 0
ஏப்ரல் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் 12.4 சதவீதம் உயர்ந்து 2.10 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.
இந்த அதிகரிப்பு முதன்மையாக 13.4 சதவீதம் என்ற வருடாந்திர அதிக உள்நாட்டுப் பரிவர்த்தனைகள் மற்றும் இறக்குமதிகளால் (8.3% வரை) ஏற்பட்டது.
சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மறைமுக வரிச் சீர்திருத்தம் தொடங்கப் பட்டதிலிருந்து இதுவரையில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச சரக்கு மற்றும் சேவை வரி வசூல் பதிவு இதுவாகும்.
ஒட்டு மொத்த வசூல் ஆனது 2 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியது இதுவே முதல் முறையாகும்.
முந்தைய அதிகபட்ச வசூலானது 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 1.87 லட்சம் கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டது என்ற நிலையில், இது 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் ஆண்டு இறுதி விற்பனையைப் பிரதிபலிக்கிறது.