அதிக மழைப்பொழிவு : நிலநடுக்கோட்டுப் பகுதியில் அமைந்த மழைக் காடுகளுக்கான வளம் காக்கும் காரணி
November 22 , 2023 638 days 417 0
சுமார் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பூமியானது முழுவதும் வெப்பமாக இருந்த நேரத்தில் பெய்த அதிக மழைப்பொழிவு நிலநடுக்கோட்டுப் பகுதியில் அமைந்த (பூமத்திய ரேகை) மழைக் காடுகளின் வளத்தினைக் காக்க உதவியது.
அப்போது பூமி தற்போது இருப்பதை விட 13 டிகிரி செல்சியஸ் வெப்பமாக இருந்த நிலையில் மேலும் இந்த காலக் கட்டத்தில் கார்பன் டை ஆக்சைடு செறிவு 1000 ppmv (ஒரு மில்லியன் கன அளவில் எத்தனை பாகங்கள்) என்ற வரம்பிற்கு மேல் இருந்தது.
மத்திய மற்றும் உயர் அட்சரேகைகளின் தற்போதைய தொல்லியல் காலப் புவி தட்ப வெப்ப நிலை தரவுகளானது, சுமார் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மழைப் பொழிவில் பெரிய ஏற்ற இறக்கங்கள் இருந்ததைக் குறிப்பிடுகின்றன.
உயிரினத் தொகுப்புகள் பாதகமான சூழ்நிலைகளில் உயிர் வாழும் வழிமுறை இன்னும் சரியாக அறியப் படவில்லை.