TNPSC Thervupettagam

அதிநவீனப் பகுப்பாய்வு மற்றும் தொழில்நுட்ப உதவி நிறுவனங்கள் (சாத்தி)

February 6 , 2020 2018 days 657 0
  • அதிநவீனப் பகுப்பாய்வு மற்றும் தொழில்நுட்ப உதவி நிறுவனங்கள் என்ற திட்டமானது (Sophisticated Analytical & Technical Help Institutes - SATHI) மத்தியப் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் (DST - Department of Science & Technology) தொடங்கப் பட்டுள்ளது.
  • DST ஆனது கரக்பூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம், ஐஐடி தில்லியில் உள்ள தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஏற்கனவே நாட்டில் 3 மையங்களை அமைத்துள்ளது.
  • அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 5 சாத்தி மையங்களை அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது.
  • இந்த மையங்கள் கல்வி, ஸ்டார்ட் அப் (புதிதாகத் தொழில் தொடங்குதல்), தொழில் துறை மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்களுக்கான முக்கிய பகுப்பாய்வுக் கருவிகள் மற்றும் மேம்பட்ட உற்பத்தி வசதிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்