அதி உயர வளிமண்டல செயற்கைக் கோள் (Pseudo Satellite)
February 13 , 2021 1659 days 762 0
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனமானது ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்துடன் இணைந்து எதிர் காலத்தில் பயன்படுத்தப்பட இருக்கும் அதி உயர வளிமண்டல செயற்கைக் கோளை மேம்படுத்திக் கொண்டிருக்கின்றது.
உலகில் மேம்படுத்தப்பட்டு வரும் இதே வகையைச் சேர்ந்த முதலாவது செயற்கைக் கோள் இதுவாகும்.
இந்தச் செயற்கைக் கோள்கள் சூரிய ஒளி ஆற்றல் மயமாக்கப்பட்டதாக இருக்கும்.
இது 2–3 மாதங்களுக்கு ஏறத்தாழ 70,000 அடி உயரத்தில் நேரடி மனிதக் கட்டுப்பாடு இல்லாமல் (ஆளில்லா) பறந்து, தகவலைச் சேகரிக்கும்.
உலகில் உள்ள எந்தவொரு நாடும் இதுவரை இந்த மாதிரியில் செயற்கைக்கோளை மேம்படுத்தியதில்லை.