TNPSC Thervupettagam

அந்தமான் தீவுகளின் புதிய துணை நிலை ஆளுநர்

September 7 , 2026 6 days 106 0
  • பாரதிய ஜனதா கட்சியின் (BJP) மாநிலங்களவை உறுப்பினரான தினேஷ் சர்மா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் துணை நிலை ஆளுநராக (LG) நியமிக்கப் பட்டுள்ளார்.
  • இவர் இதற்கு முன்பு உத்தரப் பிரதேசத்தின் துணை முதலமைச்சராக பணியாற்றினார்.
  • இவர் மாநிலங்களவையின் துணைத் தலைவராகவும் உள்ளார், இவரது மாநிலங்களவை பதவிக்காலம் 2026 ஆம் ஆண்டு நவம்பர் 25 அன்று முடிவடைய இருந்தது.
  • துணை நிலை ஆளுநர் ஒன்றியப் பிரதேசத்தின் நிர்வாகியாவார், அவர் அரசியலமைப்பின் 239வது சரத்தின் கீழ் இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப் படுகிறார்.
  • துணை நிலை ஆளுநர் குடியரசுத் தலைவரின் சார்பாக அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை நிர்வகிக்கிறார் மற்றும் குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளைப் பயன்படுத்துகிறார்.
  • அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் சட்டமன்றம் இல்லாத ஒரு ஒன்றியப் பிரதேசமாகும், எனவே அதன் நிர்வாகம் துணை நிலை ஆளுநர் மூலம் நேரடியாக மத்திய அரசின் கீழ் வருகிறது.
  • உள்துறை அமைச்சகம் (MHA) துணை நிலை ஆளுநர்கள் மற்றும் நிர்வாகிகளின் நியமனம் தொடர்பான விஷயங்கள் உட்பட ஒன்றியப் பிரதேச நிர்வாகத்திற்கான ஒருங்கிணைப்பு அமைச்சகமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்