TNPSC Thervupettagam

அந்தமான் நிக்கோபாரில் சிறிய வகை அணு உலைகள்

September 10 , 2026 3 days 56 0
  • பாபா அணு ஆராய்ச்சி மையமானது (BARC) 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 முதல் 8 ஆம் தேதி வரை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் சிறிய வகை அணு உலைகளை (SMRs) அமைப்பதற்கான இடங்களை ஆய்வு செய்து வருகிறது.
  • இந்த மதிப்பீடானது ஒன்றியப் பிரதேசத்தின் வடக்கு மற்றும் மத்திய அந்தமான், தெற்கு அந்தமான் மற்றும் நிக்கோபார் ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கியது.
  • பன்னாட்டு கொள்கலன் மாற்று முனையம் (ICTT), புதிய விமான நிலையம் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் உள்ளிட்ட கிரேட் நிக்கோபார் திட்டத்திலிருந்து அதிகரிக்கும் மின் தேவையைப் பூர்த்தி செய்ய இந்த சிறிய வகை அணு உலைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
  • இத்தீவுகள் தற்போது முக்கியமாக டீசல் அடிப்படையிலான மின் உற்பத்தியையே சார்ந்துள்ளன, இதனால் எதிர்கால வளர்ச்சிக்கு நம்பகமான உள்ளூர் மின்சாரம் முக்கியமானதாக அமைகிறது.
  • மலாக்கா நீர்ச்சந்தி மற்றும் முக்கிய கடல்சார் பாதைகளுக்கு அருகில் அமைந்துள்ளதால் கிரேட் நிக்கோபார் உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்