2025 ஆம் ஆண்டு உலக முதலீட்டு அறிக்கையானது வர்த்தகம் மற்றும் மேம்பாடு குறித்த ஐக்கிய நாடுகளின் மாநாட்டினால் வெளியிடப்பட்டது.
2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த மூலதன உருவாக்கத்தில் 2.3% ஆனது அந்நிய நேரடி முதலீடு (FDI) வரவுகள் ஆகும்.
2024 ஆம் ஆண்டில் இந்தியா சுமார் 27.6 பில்லியன் டாலர் மதிப்பிலான அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்தது என்ற நிலைமையில் இது 2023 ஆம் ஆண்டில் பதிவானதை விட 1.8% குறைவாகும்.
இது 2020 ஆம் ஆண்டில் பதிவான தொகையை விட பாதிக்கும் குறைவாகும்.
தெற்காசியாவில், பிராந்தியத்தின் அந்நிய நேரடி முதலீட்டில் இந்தியாவானது சுமார் 80% பங்கினைக் கொண்டுள்ளது.