TNPSC Thervupettagam

அனாவரன் காடழிப்பு எச்சரிக்கை அமைப்பு

March 30 , 2026 11 hrs 0 min 39 0
  • இந்திய வன ஆய்வு நிறுவனம் (FSI), செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான அனாவரன் காடழிப்பு அமைப்பிலிருந்து எச்சரிக்கைகளை வழங்குவதை 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நிறுத்தியுள்ளது.
  • அனாவரன் என்பது செயற்கைக்கோள் தரவுகளைப் பயன்படுத்தி காடு இழப்பைக் கண்டறியும் ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான தளமாகும்.
  • இது ஒவ்வொரு 15 நாட்களுக்கும் மாநில வனத் துறைகளுக்கு காடழிப்பு குறித்த நிகழ் நேர எச்சரிக்கைகளை வழங்க 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கப் பட்டது.
  • இந்த அமைப்பு ஐரோப்பிய விண்வெளி முகமையின் சென்டினல்-1 மற்றும் சென்டினல் - 2 செயற்கைக்கோள்களின் தரவுகளைப் பயன்படுத்துகிறது.
  • இது இயந்திர கற்றல் மற்றும் செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில் 10 முதல் 20 மீட்டர் தெளிவுத்திறனுடன் வனப்பகுதியின் மாற்றங்களை அதிக துல்லியத்துடன் கண்டறிகிறது.
  • இந்திய வன ஆய்வு நிறுவனம் (FSI), மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் (MoEFCC) கீழ் செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்