அனைத்திந்தியச் சுற்றுலா வாகனங்களுக்கான அங்கீகாரம் மற்றும் அமைதி வழங்கும் விதிகள்
March 18 , 2021 1639 days 679 0
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகமானது “அனைத்திந்தியச் சுற்றுலா வாகனங்களுக்கான அங்கீகாரம் மற்றும் அனுமதி வழங்கும் விதிகள், 2021” எனும் புதிய விதிகளை அறிவித்துள்ளது.
இந்தப் புதிய விதிகள் மாநில வருவாய் மற்றும் சுற்றுலாவினை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அறிவிக்கப் பட்டுள்ளது.
இது 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 முதல் அமலுக்கு வரும்.
இத்திட்டத்தின் கீழ் எந்தவொரு பயணியர் வாகன ஓட்டுநரும் அனைத்திந்தியச் சுற்றுலா அங்கீகாரம் (அ) அனுமதியினைப் பெற இணைய தளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.