இந்தியக் கடற்படையின் 314 பிரிவு விமானப் படைப் பிரிவினைச் சேர்ந்த (INAS 314) ஐந்து பெண் அதிகாரிகள், முழுவதும் மகளிர் அணியினரால் நடத்தப்படும் முதலாவது தன்னிச்சையான கடல்சார் உளவு மற்றும் கண்காணிப்புப் பணியை நிறைவு செய்து வரலாறு படைத்தனர்.
இது டோர்னியர் 228 என்ற விமானத்தில் வடக்கு அரபிக்கடலுக்கு மேற்பரப்பில் வான் வெளியில் நடத்தப்பட்டது.
இது இத்தகைய முதல் வகையிலான இராணுவ விமானக் கண்காணிப்புப் பணியாகும்.
இந்த விமானமானது இந்தத் திட்டப்பணியின் படைத்தளபதி லெப்டினன்ட் கமாண்டர் ஆஞ்சல் சர்மா தலைமையில் இயக்கப் பட்டது.