அனைத்து வீடுகளிலும் 100 சதவிகிதம் குடிநீர் குழாய் இணைப்புகள்
November 1 , 2022 1062 days 481 0
குஜராத் மாநிலமானது 100 சதவீத ‘ஹர் கர் ஜல்’ மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில், 'ஹர் கர் ஜல்' திட்டத்தின் கீழ், அங்குள்ள கிராமப்புறங்களில் அமைந்த அனைத்து வீடுகளுக்கும் குழாய்கள் மூலம் பாதுகாப்பான குடிநீர் வழங்கப் படுகிறது.
'ஹர் கர் ஜல்' திட்டமானது, 2019 ஆம் ஆண்டில் பிரதமரால் தொடங்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டிற்குள் ஒவ்வொரு கிராமப்புற குடும்பங்களுக்கும் வீட்டுக் குடிநீர்க் குழாய் இணைப்புகள் மூலம் ஒரு நபருக்கு 55 லிட்டர் தண்ணீர் கிடைக்கச் செய்வதை இது இலக்காகக் கொண்டுள்ளது.