அனைத்து CAPF பிரிவுகளிலும் பணி நிலைப் பிரிவு மதிப்பாய்வு
May 30 , 2025 157 days 128 0
உச்ச நீதிமன்றம் ஆனது இந்தியத் திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP), எல்லைக் காவல் படை (BSF), மத்திய சேமக் காவல் படை (CRPF), மத்தியத் தொழிற்துறைப் படை (CISF) மற்றும் சஷாஸ்த்ர சீமா பால் (SSB) உள்ளிட்ட அனைத்து மத்திய ஆயுதக் காவல் படைகளிலும் (CAPF) பணிநிலைப் பிரிவு மதிப்பாய்வை ஆறு மாதங்களுக்குள் நடத்த உத்தரவிட்டுள்ளது.
இந்த மதிப்பாய்வு ஆனது முதலில் 2021 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட திட்டமிடப் பட்டது, ஆனால் தாமதமானது.
CAPF படைகளில் தலைமை ஆய்வாளர் பதவி வரையிலான இந்தியக் காவல் பணி (IPS) அதிகாரிகளின் பணியமர்த்தலை இரண்டு ஆண்டுகளில் "படிப்படியாகக் குறைக்க" வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இதனால் பணிநிலைப் பிரிவு அதிகாரிகளுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.
பணிநிலைப் பிரிவு சார்ந்தப் பிரச்சினைகள் மற்றும் பிற தொடர்புடைய அனைத்து விவகாரங்களுக்கும் CAPF படையானது ஒழுங்கமைக்கப்பட்ட A வகுப்பு பணிகளாகக் (OGAS) கருதப்படுகின்றன.
தற்போது, இந்தப் படைகளில் IG நிலையில் 50% பதவிகள் IPS அதிகாரிகளுக்கு ஒதுக்கப் பட்டுள்ளன.
துணைத் தலைமை ஆய்வாளர் (DIG) பதவிகளில் இராணுவத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர (5%), சுமார் 15 சதவீதம் ஆனது அகில இந்தியப் பணியிலிருந்து பணியமர்த்தப் பட்ட அதிகாரிகளுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது.