TNPSC Thervupettagam

அபிஜே கொல்கத்தா இலக்கியத் திருவிழா

November 6 , 2018 2464 days 772 0
  • 10-வது அபிஜே கொல்கத்தா இலக்கியத் திருவிழா 2019-ம் ஆண்டு ஜனவரி 18 முதல் 20 வரை நடத்தப்பட இருக்கின்றது.
  • இத்திருவிழா வளரும் எழுத்தாளர்களை அடையாளப்படுத்தி ஊக்குவிப்பதற்கான புதிய எழுத்தாளர்களுக்கான போட்டி, பெண்கள் இலக்கியம், குழந்தை எழுத்தாளர்கள், இலக்கியத்திற்கான வினாவிடைகள், கலந்துரையாடல்கள், கதை சொல்லும் நிகழ்ச்சி மற்றும் பாரம்பரியமான புதிய கவிதைத் தொகுப்புகள், கவிஞர்கள் மற்றும் உரைநடை எழுத்தாளர்களை அடையாளப்படுத்திட கவிதை கண்காட்சி போன்ற பகுதிகளைக் கொண்டிருக்கும்.
  • இத்திருவிழா சுகாதாரம், நடப்பு நிகழ்வுகள், பெண்கள் பிரச்சினை மற்றும் குழந்தைகள் இலக்கியம் போன்ற இதர விஷயங்கள் மீதும் கவனம் செலுத்தும்.
  • 2010 ஆம் ஆண்டிலிருந்து, இத்திருவிழாவானது நிகழ்நேர நாடகக் காட்சிகள், பாரம்பரிய உரையாடல்கள், தெரு நாடகம், நேரலை பன்முக இசை நிகழ்ச்சிகள், திரைக் காட்சிகள் மற்றும் இலக்கிய கருத்தரங்குகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்