TNPSC Thervupettagam

அப்தலா மற்றும் சொபெர்னா

September 14 , 2021 1413 days 532 0
  • உலகிலேயே முதன்முறையாக இரண்டு வயதிற்கு உட்பட்டக் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்திய நாடு கியூபா ஆகும்.
  • எனினும், குழந்தைகளுக்குச் செலுத்தப்பட்ட அந்த மருந்துகள் உலக சுகாதார அமைப்பினால் அங்கீகரிக்கப்படாத உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவையாகும்.
  • கியூபா நாடானது தனது அப்தலா மற்றும் சொபெர்னா தடுப்பு மருந்துகளை சிறார்கள் மீது செலுத்தி மருத்துவப் பரிசோதனையை நிறைவு செய்தது.
  • லத்தீன் அமெரிக்காவில் முதன்முதலில் உருவாக்கப்பட்ட இந்தக் கியூப நாட்டு மருந்துகள் சர்வதேச மற்றும் அறிவியல்பூர்வ சக மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட வில்லை.
  • இவை அமெரிக்காவில் நோவாவாக்ஸ் மற்றும் பிரான்சு நாட்டின் சனோஃபி ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்ட ஒரு இனக்கலப்பு புரதத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டவையாகும்.
  • நோவாவாக்ஸ் மற்றும் சனோஃபி ஆகியவையும் உலக சுகாதார அமைப்பில் அனுமதியைப் பெற காத்திருக்கின்றன.
  • பயன்பாட்டிலுள்ள இதரத் தடுப்பு மருந்துகளைப் போல் இந்த இனக்கலப்பு தடுப்பு மருந்துகளுக்கு உச்சகட்ட குளிர்சாதன வசதி தேவையில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்