அமலாக்கத் துறை இயக்குநரகத்தின் தலைவர் - சஞ்சய் குமார் மிஸ்ரா
October 29 , 2018 2451 days 855 0
நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவானது சஞ்சய் குமார் மிஸ்ராவை அமலாக்கத் துறை இயக்குநரகத்தின் தலைவராக (ED - Enforcement Directorate) நியமித்துள்ளது.
இவரை அமலாக்கத் துறை இயக்குநரகத்தின் சிறப்பு முதன்மை இயக்குநராகவும் கூடுதல் பொறுப்பாக மூன்று மாத காலம் அல்லது நிரந்தரத் தலைவர் நியமிக்கப்படும் வரை அமலாக்கத் துறையின் இயக்குநராகவும் செயல்பட நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு நியமித்துள்ளது.
அமலாக்கத் துறை இயக்குநராக பதவி வகித்த கர்னல் சிங் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி ஓய்வு பெற்றதையடுத்து, இவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.