அமினோ குழு ஏற்றப்பட்ட கிராஃபீன் மீநிலை மின் தேக்கி
July 20 , 2025 154 days 124 0
நாகாலாந்து பல்கலைக்கழக அறிவியலாளர்கள் மிக வேகமாக மின்னேற்றம் செய்யும் மற்றும் நீண்ட காலம் நீடிக்கும் மீநிலை மின் தேக்கியை உருவாக்கி வருகின்றனர்.
இது வழக்கமான லித்தியம்-அயனி மின்கலன்களை விட சிறப்பாக செயல்படுகிறது.
மீநிலை மின் தேக்கிகள் என்பது வழக்கமான மின்தேக்கிகள் மற்றும் சாதாரணமான மின் கலன்களுக்கு இடையிலான ஒரு இடைவெளியைக் குறைக்கும் ஆற்றல் சேமிப்பு சாதனங்கள் ஆகும்.
ஆக்சிஜன் குழு குறைக்கப்பட்ட கிராஃபீன் ஆக்சைடிலிருந்துப் பெறப்பட்ட அமினோ குழு ஏற்றப் பட்ட கிராஃபீனில் இந்த ஆராய்ச்சி கவனம் செலுத்துகிறது.
இந்தப் பொருள் ஆனது சாதாரண கிராஃபைட்டை அதி உயர் செயல்திறன் கொண்ட அமினோ குழு ஏற்றப் பட்ட கிராஃபீனாக மாற்றும் ஒரு நெறிப்படுத்தப்பட்ட, ஒற்றை படி செயல்முறையைப் பயன்படுத்தி தயாரிக்கப் படுகிறது.