பஞ்சாப் அரசானது அமிர்தசரி குல்சாவிற்கான புவி சார் குறியீடு பெறுவது குறித்து ஆராய்ந்து வருகிறது என்பதோடு மேலும் புது டெல்லியில் நடைபெறும் உலக உணவு இந்தியா 2025 நிகழ்வில் அதை விளம்பரப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
அமிர்தசரி குல்சா சுமார் ஆறு அங்குல விட்டம் கொண்டது மற்றும் அதன் மாவு, உள் திணிப்பு, சமையல் முறை, பரிமாறும் பாணி மற்றும் இரண்டு முறை புளிக்க வைக்கப் பட்டதால் உருவான நறுமணத்திற்குப் பெயர் பெற்றது.
ஒரு புராணக் கதையானது அதன் உருவாக்கத்தை பேரரசர் ஷாஜகானின் அரச சமையலறையுடன் இணைப்பதால் இந்த உணவு முகலாய காலத்தில் தோன்றியதாக நம்பப்படுகிறது.