அமுர் பருந்துகள் ஒவ்வொரு இலையுதிர் காலத்திலும் வடகிழக்கு இந்தியாவிலிருந்து ஆப்பிரிக்காவிற்கு 5,000 முதல் 6,000 கி.மீ. வரை இடைவிடாமல் பயணித்து வலசை போகின்றன.
2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) ஆனது இலகுரக அலை பரப்பிகளைப் பயன்படுத்தி அபாபாங், ஆலாங் மற்றும் அஹு ஆகிய மூன்று பருந்துகளைக் கண்காணித்தது.
அபாபாங் 6 நாட்கள் 8 மணி நேரத்தில் 6,100 கி.மீ. பறந்து தான்சானியாவினை அடைந்தது; ஆலாங் 6 நாட்கள் 14 மணி நேரத்தில் 5,600 கி.மீ. பறந்து கென்யாவினை அடைந்தது; அஹு 5 நாட்களில் 5,100 கி.மீ. பயணித்து சோமாலியாவினை அடைந்தது.
2012 ஆம் ஆண்டில் நாகாலாந்தில் மிகப் பெருமளவில் பதிவான வேட்டையாடலைத் தொடர்ந்து, இந்தக் கண்காணிப்புத் திட்டம் தொடங்கப்பட்டது என்பதோடுமேலும் 2016 ஆம் ஆண்டில் வலசை போகும் இனங்கள் தொடர்பான உடன்படிக்கையின் கீழ் இந்தியா கொன்றுண்ணி பறவை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
வடகிழக்கு இந்தியாவில் 2 முதல் 3 வாரங்கள் வரை இப்பருந்துகள் தங்கி, அரேபியக் கடலைக் கடப்பதற்கு முன்னதாக உடலில் கொழுப்பு இருப்புக்களை உருவாக்க கரையான் கூட்டங்களை உண்கின்றன.