TNPSC Thervupettagam

அமுர் பருந்துகள் வலசை

December 3 , 2025 23 days 93 0
  • டிட்வா புயல் ஆனது இரண்டு பெண் அமுர் பருந்துகளை/வல்லூறுகளை அவற்றின் வழக்கமான வலசைப் பாதையிலிருந்து விலக்கி தமிழ்நாட்டின் கோடியக்கரை பாதையில் தள்ளியது.
  • இந்தப் பறவைகள் வழக்கமாக சைபீரியா, வடக்கு சீனா மற்றும் மங்கோலியாவில் இருந்து தென்னாப்பிரிக்காவிற்கு சுமார் 40,000 கி.மீ தூரம் பயணிக்கின்றன.
  • அவற்றின் பொதுவான இந்திய வலசைப் பாதை குஜராத்-மகாராஷ்டிரா வழியாகும்.
  • கோடியக்கரையில் முன்னதாக 2020 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் மற்ற புயல்களின் போது அமுர் பருந்துகளின் இயக்கம் பதிவானது.
  • அமுர் பருந்துகளானது, சிறிய கொன்றுண்ணிகள் மற்றும் IUCN அமைப்பின் கீழ் தீ வாய்ப்பு கவலை குறைந்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • அவை இடம்பெயர்ந்த இனங்கள் பற்றிய உடன்படிக்கையின் (CMS) பிற்சேர்க்கை II மற்றும் 1972 ஆம் ஆண்டு வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் IV ஆம் அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்