TNPSC Thervupettagam

அமுர் பருந்து கண்காணிப்புத் திட்டம்

May 25 , 2026 14 hrs 0 min 38 0
  • 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மணிப்பூரில் செயற்கைக்கோள் அலைபரப்பிகள் பொருத்தப்பட்ட அபாபாங் மற்றும் அலாங் எனப்படும் இரண்டு அமுர் பருந்து பறவைகள், வசந்த கால வலசையின் போது தென்னாப்பிரிக்காவிலிருந்து கிழக்கு ஆசியாவிற்கு திரும்புகின்றன.
  • சுற்றுச்சூழல், காடு மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் (MoEFCC) ஆதரவுடன், இந்திய வனவிலங்கு நிறுவனம் மற்றும் மணிப்பூர் வனத்துறை இணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகின்றன.
  • அமுர் பருந்து என்பது அரபிக் கடலைக் கடப்பது உட்பட சுமார் ஆறு நாட்களில் கிட்டத்தட்ட 6,000 கி.மீ தூரம் பயணிக்கும் ஒரு நீண்ட தூர வலசை போகும் வேட்டையாடிப் பறவையாகும்.
  • இதன் இனப்பெருக்கத் தளங்கள் வடக்கு சீனா மற்றும் தூர-கிழக்கு ரஷ்யாவில் உள்ள அதே சமயம் குளிர்காலத்தை இவை கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்காவில் கழிக்கின்றன.
  • IUCN செந்நிறப் பட்டியலில் இப்பறவையினம் "தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்" என வகைப்படுத்தப்பட்டுள்ளது; மேலும் இது 1972 ஆம் ஆண்டின் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்