அமெரிக்கக் கடற்படைக் கப்பலின் முதல் பழுதுநீக்கப் பணி
August 10 , 2022 1198 days 587 0
அமெரிக்கக் கடற்படைக் கப்பலானது சென்னை எண்ணூரில் உள்ள L&T என்ற நிறுவனத்தின் காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்திற்குப் பழுது மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக வந்தடைந்தது.
இது இந்திய - அமெரிக்க இராணுவக் கூட்டுறவிற்கு என்று புதிய உத்தி சார்ந்த ஒரு பரிமாணத்தைச் சேர்க்கிறது.
இந்தியக் கப்பல் கட்டும் தளத்தில் முதன்முறையாக ஒரு அமெரிக்க கடற்படைக் கப்பல் பழுது பார்க்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற இந்திய - அமெரிக்க 2+2 பேச்சு வார்த்தையின் போது இந்தியக் கப்பல் கட்டும் தளங்களின் சேவைகள் மற்றும் நிபுணத்துவத்தைப் பெறுவதற்கு அமெரிக்கக் கடற்படைக்கு அனுமதி வழங்குவதாக இந்தியா முன்மொழிந்தது.
தளவாடங்கள் பரிமாற்றப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (LEMOA) ஒரு பகுதியாக, இந்திய கப்பல் கட்டும் தளங்களில் அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களைப் பழுது பார்க்கச் செய்வதற்கு என்று வழி வகை செய்யப்பட்டது.
தளவாடங்கள் பரிமாற்றப் புரிந்துணர்வு ஒப்பந்தமானது இந்திய மற்றும் அமெரிக்கக் கடற்படைகளுக்கு இடையே சரக்குகள் மற்றும் போர் சார்ந்த பொருட்களின் மீதான பரிமாற்றத்தை எளிதாக்குவதற்காக கையொப்பமானது.