TNPSC Thervupettagam

அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் கட்டளையகம்

June 23 , 2026 13 days 73 0
  • அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் கட்டளையகம் (USINDOPACOM) என்ற பெயரை மீண்டும் அமெரிக்க பசிபிக் கட்டளையகம் (USPACOM) என மாற்றினார்.
  • 1947 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தக் கட்டளையகமானது, அமெரிக்க இராணுவத்தின் பதினொரு ஒருங்கிணைந்த போர் கட்டளையகங்களில் மிகப் பழமையானது மற்றும் மிகப்பெரியது ஆகும்.
  • இதன் பொறுப்புப் பகுதியானது அமெரிக்காவின் மேற்கு கடற்கரையிலிருந்து இந்தியாவின் மேற்கு எல்லை வரை நீண்டுள்ளது என்பதோடு இந்த புவியியல் அதிகார வரம்பு மாற்றப்படாமல் அப்படியே தொடர்கிறது.
  • இந்தக் கட்டளையகத்தில் அமெரிக்க இராணுவ பசிபிக் (USARPAC), அமெரிக்க பசிபிக் கப்பற்படை (PACFLT), பசிபிக் விமானப் படைகள் (PACAF), கடல்சார் படைகள் பசிபிக் (MARFORPAC), அமெரிக்கப் படைகள் ஜப்பான் (USFJ) மற்றும் அமெரிக்கப் படைகள் கொரியா (USFK) போன்ற முக்கிய அமைப்புகள் அடங்கும்.
  • இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ரிம் ஆஃப் தி பசிபிக் (RIMPAC), யுத் அபியாஸ் மற்றும் ரெட் பிளாக் போன்ற கூட்டுப் பயிற்சிகள் மற்றும் தளவாடங்கள் மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவு படுத்தியுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்