அமெரிக்காவில் முதலாவது பருவநிலைத் தாக்கக் கட்டணம் – ஹவாய்
June 4 , 2025 154 days 187 0
பருவநிலைத் தாக்கக் கட்டணத்தினை அமல்படுத்திய முதல் அமெரிக்க மாநிலமாக ஹவாய் மாறியுள்ளது.
சுற்றுச்சூழல் முன்னெடுப்புகளை ஆதரிப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் மீது புதிய வரியை அறிமுகப்படுத்துகிறது.
நாட்டின் முதல் பசுமைக் கட்டணம், அந்த மாகாணத்தின் தற்காலிக தங்குமிட வரியை 0.75% அதிகரிக்கும்.
முன்னர் TAT ((Transient Accommodation Tax) என்ற வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட பயணக் கப்பல் பயணிகளும் தற்போது புதிய சட்டத்தின் கீழ் சேர்க்கப்படுவார்கள்.
புதியப் பசுமைக் கட்டண வரியானது ஒவ்வோர் ஆண்டும் சுமார் 100 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.