அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்காபாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து இரண்டு முறை விலகிய ஒரே நாடு இதுதான்.
2017-ல் முதன்முதலில் விலகிய பிறகு, 2021-ல் அதிபர் பைடனின் கீழ் மீண்டும் இணைந்திருந்த அமெரிக்கா, இப்போது மீண்டும் இந்த உலகளாவிய ஒப்பந்தத்தைக் கைவிட்ட ஒரே நாடாக மாறியுள்ளது.
சீனாவிற்குப் பிறகு உலகின் இரண்டாவது பெரிய பசுமை இல்ல வாயுக்களை வெளியிடும் நாடு அமெரிக்கா ஆகும்.
பாரிஸ் ஒப்பந்தத்திற்கு வெளியே உள்ள மற்ற ஐ.நா உறுப்பு நாடுகள் ஈரான், லிபியா மற்றும் ஏமன் மட்டுமே.
பாரிஸ் ஒப்பந்தம் என்பது, புவி வெப்பமயமாதலைத் தொழில்துறைக்கு முந்தைய நிலைகளை விட 2°C-க்குக் கீழே —குறிப்பாக 1.5°C-க்குக் கீழே— கட்டுப்படுத்தும் நோக்குடன், 2015-ல் (COP21) 195 தரப்பினரால் ஏற்றுக் கொள்ளப் பட்ட சட்டப்பூர்வ பிணைப்புடைய ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும்.
இது, நாடுகள் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்டப் பங்களிப்புகள் (NDCs) எனப்படும் பெருகிய முறையில் லட்சியம் நிறைந்த, தன்னார்வப் பருவநிலைத் திட்டங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று கோருகிறது.
1.5°C இலக்கு என்பது ஒரு தனி ஆண்டைக் குறிக்காமல், பொதுவாக 20 ஆண்டுகளின் சராசரியைக் குறிப்பதாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.