TNPSC Thervupettagam

அமெரிக்கா-ஈரான் முதற்கட்ட அமைதி ஒப்பந்தம் 2026

June 21 , 2026 16 hrs 0 min 27 0
  • அமெரிக்காவும் ஈரானும் தங்களது ராணுவ மோதலை முடிவுக்குக் கொண்டுவரவும், ஹார்முஸ் நீர்ச்சந்தி மற்றும் ஓமன் வளைகுடாவில் உள்ள கடற்படை முற்றுகையை விலக்கிக் கொள்ளவும் ஒரு முதற்கட்ட அமைதி ஒப்பந்தத்தை அறிவித்தன.
  • இந்த ஒப்பந்தம் 60 நாள் பதற்றத்தைத் தணிக்கும் வழிமுறையாகச் செயல்படும் ஒரு அவசரகால புரிந்துணர்வு ஒப்பந்தமே தவிர, இறுதியான அமைதி ஒப்பந்தம் அல்ல.
  • இது உடனடி போர்நிறுத்தம், ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியாக கட்டணமில்லா சர்வதேச வர்த்தக கப்பல் போக்குவரத்து மற்றும் உடனடி கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு வழி வகை செய்கிறது.
  • 60 நாள் பேச்சுவார்த்தைக் காலத்தில் முடக்கப்பட்ட 24 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஈரானிய சொத்துக்களை கட்டம் கட்டமாக விடுவிக்கவும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.
  • இந்த ஒப்பந்தம் உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தவும், எண்ணெய் விலையைக் குறைக்கவும், இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிக்கான முக்கிய பாதையான ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியாக பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்