2000 ஆம் ஆண்டில் அமெரிக்காவுடன் கையெழுத்திடப்பட்ட புளூட்டோனியம் மேலாண்மை மற்றும் இடமாற்ற ஒப்பந்தத்திலிருந்து (PMDA) விலகுவதற்கு ரஷ்யாவின் நாடாளுமன்றத்தின் கீழவை ஒப்புதல் அளித்தது.
PMDA ஆனது இரு நாடுகளும் தலா 34 டன் (சுமார் 17,000 அணு ஆயுதங்களை உருவாக்கப் போதுமானது) ஆயுதத் தரப் பயன்பாட்டிற்கான புளூட்டோனியத்தினை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரியது.
இந்த ஒப்பந்தம் ஆனது 2011 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.
புளூட்டோனியத்தினை கலப்பு ஆக்சைடு (MOX) எரிபொருளாக மாற்றுவதன் மூலமோ அல்லது உலைகளில் கதிர்வீச்சு நீக்கம் செய்வதன் மூலமோ அதன் பரவல் அபாயங்களைக் குறைப்பதை இது நோக்கமாகக் கொண்டது.
அமெரிக்கத் தடைகள், நேட்டோ விரிவாக்கம் மற்றும் அமெரிக்க புளூட்டோனியம் அகற்றும் முறைகளில் ஒருதலைபட்ச மாற்றங்கள் ஆகியவற்றைக் காரணம் காட்டி, ரஷ்யா 2016 ஆம் ஆண்டில் அதன் செயல்படுத்தலை நிறுத்தியது.
ரஷ்யாவும் அமெரிக்காவும் இன்றும் 8,000 அணு ஆயுதங்களை வைத்து இருக்கின்றன, என்ற நிலையில் இது 1986 ஆம் ஆண்டில் 73,000 ஆக இருந்தது.