அமெரிக்கா அதன் அணு ஆயுத அமைப்புகளில் சோதனைகளை நடத்த திட்டமிட்டு உள்ளது.
அணு வெடிப்புகள் இடம் பெறாத இந்தச் சோதனைகளில் அமைப்புகளின் செயல்பாடு, வடிவியல் மற்றும் விநியோக வழிமுறைகளை ஆராயப்படும்.
புதிய அமைப்புகளை மதிப்பீடு செய்வதும் மாற்றீடு அணு ஆயுதங்கள் திறம்படச் செயல்படுவதை உறுதி செய்வதும் இதன் நோக்கமாகும்.
அமெரிக்கா முன்னர் 1960, 1970 மற்றும் 1980 ஆகிய ஆண்டுகளில் அணுசக்தி சோதனை வெடிப்புகளை நடத்தியது என்ற நிலையில்மேலும் தற்போது வெடிப்பு விளைவுகளை கணிக்க மேம்பட்ட மாதிரியாக்க/உருவகப்படுத்துதல்களைப் பயன்படுத்துகிறது.
உலகளாவிய அணுசக்தி முன்னேற்றங்களைக் கண்காணித்தல் (ரஷ்யா, சீனா, வட கொரியா ஆகியவற்றின்) மற்றும் உத்தி சார் தயார்நிலையைப் பேணுதல் ஆகியவற்றினை இந்தச் சோதனைக்கான காரணங்களாக அதிகாரிகள் மேற்கோள் காட்டினர்.